இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகன்குளம் கிராமத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 32 கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், IPS அவர்கள் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். கிராமப்புறங்களில் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்காணித்து தடுக்கும் நோக்கிலும் இந்த நவீன கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், காவல்துறையின் கண்காணிப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















