ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி தீபா சத்யன் ஐ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவலர்கள் திரு.ராஜ்குமார் மற்றும் திருமதி.ஐஸ்வர்யா ஆகியோரால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 8,12,098/- மதிப்புள்ள 54 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்யன் அவர்களால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்துக்கருப்பன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் மதிப்புள்ள ஐம்பது செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்




















