சென்னை: தென் மாவட்டங்களில் பாலியல் வழக்கில் சிக்கிய 70 பேர், போதை வழக்கில் தொடர்புடைய 152 பேர் மற்றும் 598 குற்றவாளிகள் உட்பட 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை காக்கவும் நெல்லை, #தூத்துக்குடி, தென்காசியில் ஜாதி ரீதியாக நடக்கும் கொலைகளை தடுக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2024 ல் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தென் மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப. அவர்கள் தொடர் கண்காணிப்பின் மூலம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. 12 ஆண்டுகளில் நடந்த பாலியல் வழக்குகளின் நிலை குறித்து சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை தவிர்க்க உடனடியாக குற்றப் பத்திரிக்கை மற்றும் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு அறிவித்தப்பட்டுள்ளது.குற்றங்களை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி