திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (02.05.2026) கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. திருப்பத்தூர் நகரப் பகுதியில், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தொடங்கி ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஈத்கா ரோடு வழியாக மகளிர் காவல் நிலையம் வரை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இக்கொடி அணிவகுப்பில் திருப்பத்தூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர். அதே போல், வாணியம்பாடி நகரப் பகுதியில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.மகாலட்சுமி., அவர்கள் தலைமையில், வாணியம்பாடி வாரச்சந்தை ரவுண்டானாவில் தொடங்கி CL ரோடு, நூருல்லாப்பேட்டை சந்திப்பு வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.



















