மதுரை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காலை மாநிலம் முழுவதும் கோவில்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 9 அரசு மதுபான கடைகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, உசிலம்பட்டியில் மதுரை–தேனி நெடுஞ்சாலையில் செல்வ விநாயகர் கோவில், தனி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை எண் 5288 மூடப்பட்டது. கோவில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்குள் அமைந்திருந்ததால், தமிழக அரசின் புதிய அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மதுபான கடை மூடப்பட்டதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















