கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

















