திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் To ஜமுணாமரத்தூர் சாலையில் உள்ள 5-வது கொண்டை ஊசி வளைவில் பலத்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்களின் தலைமையில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினருடன் இணைந்து, விரைந்து சென்று மண்சரிவை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இச்செயலுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.





















