மதுரை : மதுரை கூடல்புதூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் வின்சென்ட் செல்வராஜ் ஆகிய இருவர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்,பணம் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

திரு.ஜஸ்டின் சரவணன்



















