திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்.03.10.2020 அன்று பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (35) என்பவர் பாலியல் தொந்தரவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரினை தொடர்ந்து நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்களின் தலைமையில் காவல் நிலைய போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முத்துராஜ் செம்பட்டி அருகே இருப்பது தெரியவந்தது, விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...