திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டியை அடுத்த அய்யாப்பட்டி சேர்ந்த பாலமுருகன் இவர் பழனி கோயிலுக்கு செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சிவகாசியை சேர்ந்த கனகரெட்டி மகன் சோமசுந்தரம்(45). என்பவர் பாலமுருகன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடுத்ததாக அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் விசாரணை செய்து சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சோமசுந்தரத்தின் மீது மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















