பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை, மாநிலம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
6 முக்கிய பொறுப்புகள்:
பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுத்தல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். குற்றம் நடைபெறக்கூடிய பகுதிகளை கண்டறிதல் பாதுகாப்பு குறைவாக உள்ள மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அடையாளம் காணுதல். தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்வது.
டிரோன் ரோந்து மூலம் பாதுகாப்பு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்வது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை உடனடியாக கையாளுதல்
அவசர அழைப்புகள் மற்றும் புகார்களுக்கு விரைவாக பதிலளித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது. விழிப்புணர்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு அரசு துறைகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.




















