திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கோதமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக பெரிச்சிபாளையம் மேற்குத் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் (26). என்பவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி டிஸ்பி தேவராஜ் உத்தரவின்படியும், ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட முகமது யூசுப்(26). மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சட்டவிரோத மது விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத மது விற்பனை, புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வாளர் சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















