கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா IAS அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் அதிகாரப்பூர்வமாக தனது புதிய பொறுப்பை ஏற்றார். நாகர்கோவில் மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள், பொதுமக்கள் சேவைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




















