தேனி : தேனி மாவட்ட காவல் துறை சார்பில், புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தமாக 12,207 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 8,884 கிலோ கிராம் புகையிலை பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் 09.05.2026 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹாப்ரியா தலைமையில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களின் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




















