இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் அவர்கள் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஆய்வு செய்தார். ரோந்து வாகனங்களில் பாதுகாப்பு மற்றும் அவசரகால உபகரணங்கள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவை செயல்பாட்டு நிலையில் உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சாலை விபத்துகள் நேர்ந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக உதவி வழங்க வேண்டும் என்றும், ரோந்து வாகனங்களில் உள்ள Revolving Lights 24 மணி நேரமும் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு எஸ்பி அறிவுறுத்தினார்.




















