திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) சார்பில், திருப்பத்தூர் மாதிரிப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. ரூபி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மேலும், மாணவிகள் தங்களது உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தேவையான விளக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




















