திருநெல்வேலி: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (09.06.2021) திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரத்தில் உள்ள திருநங்கைகளுக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை உதவி ஆய்வாளர் திரு.வள்ளிநாயகம், அவர்கள் வழங்கினார்கள்..



















