செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில், வசித்து வந்த மனோகர் (47), இவர் குன்னவாக்கம் ஏரிக்கரை, அருகே சொந்தமாக சிமண்டு செங்கல் தயாரிக்கும், தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு தொழிறசாலையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டுக்கு வராததால், அவரது தந்தை முத்து, அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது இரண்டு கால்கள் கட்டப்பட்டு முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் மனோகர், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.




















