திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட SJHR (Social Justice and Human Rights) பிரிவினரால் சோமலாபுரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உத்தரவாதச் சட்டம் (MGNRS) ஊழியர்களுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மனித உரிமைகளின் முக்கியத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள், சமூக சமத்துவம், சட்ட உதவிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் தங்களது உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் பேணிட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.




















