திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்திற்குட்பட்ட திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லையில், தமிழ்நாடு–ஆந்திரா வழித்தடங்களில் சட்டவிரோத கடத்தல்களை தடுக்க புதிய CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. சியாமளா தேவி உத்தரவின்பேரில் தகரகுப்பம்–ஜோதிநகர் மற்றும் திம்மாம்பேட்டை–மோட்டூர் சந்திப்பு பகுதிகளில் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, வெளிமாநில மதுபானங்கள், கள்ளச்சாராயம், கனிம வளங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















