திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்ட அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் போது அறங்கள் துர்கம் விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (32 ). என்பவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக சுமார் 12 கிலோ குட்கா மற்றும் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.




















