திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் தனது பகுதியை சேந்த இளம்பெண் ஒருவரை 2018ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார்.
மூன்று வருடம் தொடர்ந்த இந்த உறவின் வெளிப்பாடாய், தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். தான் கருத்தரித்தரிப்பது குறித்து அரவிந்த்குமாரிடம் கூறிய அப்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி உள்ளார்.
அதற்கு அரவிந்த் குமார் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் அளித்த புகாரின் பேரில், அரவிந்த்குமாரை மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்




















