திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல்நிலை காவலர் திரு.பொன்ராஜ், காவலர் திரு.ஸ்ரீராம், இருவரும் நாடார் உவரி பஸ் ஸ்டாப் அருகே பணியிலிருந்த போது, திசையன்விளை தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வரும் குழந்தை பள்ளி பேருந்தில் இருந்து கீழே இறங்கி சாலையை கடந்து செல்லும் போது இருசக்கர வாகனம் மோதியதில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் திரு.பொன்ராஜ் மற்றும் திரு.ஸ்ரீராம் உடனடியாக குழந்தையை மீட்டு முதலுதவி செய்து குழந்தையை தங்களது இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். மேற்படி குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உதவிய காவலர்களின் செயலை கண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் காவலர்களை இன்று நேரில் அழைத்து அவர்களின் நற்செயலை வெகுவாக பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.



















