திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதை தொடர்ந்து, அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துமணி அவர்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து கலைஞர் காவல் கோப்பை வழங்கி பாராட்டினார். மகளிர் பாதுகாப்பு, வழக்குகள் விரைவாக விசாரணை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சிறப்பான பணிகளுக்காக இந்த காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















