ஈரோடு : ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மகாராஜன்புரம் அருகே காவல் துறையினர், வாகன தணிக்கையில், ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மொபட்டை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 2 மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அவற்றில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மொபட்டை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் இக்களூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (33), என்பதும், அவர் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக அவரை காவல் துறையினர், கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிேலா ரேஷன் அரிசியுடன் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :