இராமநாதபுர: இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா விற்பனையைத் தடுக்க பஜார் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பஜார் காவல்துறையினருக்கு முதுநாள் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மதன் மற்றும் மாசிலாமணி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















