திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சரகம் மாங்கரை, கொட்டாரப்பட்டி, அம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ரெட்டியார்சத்திரம் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் (08.06.2026) ம் தேதி அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வரும் ஜெயபால் (45). த.பெ. முத்து என்பவரின் தோட்டத்தில் தணிக்கை செய்ய மேற்படி தோட்டத்தில் 56 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எதிரிகள் 1)ஜெயபால் மற்றும் அவரது மனைவி 2)நந்தினி (37). மற்றும் இதில் தொடர்புடைய மற்றொரு எதிரான 3)செய்யது காட்டுபாவா (31). த.பெ. அப்துல் ரஹ்மான், சமுத்திராப்பட்டி, நத்தம் ஆகியோரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















