திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே அவர்கள் தலைமையில் வட்டார எழுத்தர்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவல் நிலைய நிர்வாகப் பணிகள், வழக்கு ஆவணங்களின் பராமரிப்பு, பதிவேடுகள் புதுப்பித்தல், அலுவலக செயல்பாடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், காவல் நிலையங்களில் ஆவணங்களை முறையாக பராமரித்தல், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்தல், அரசு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுதல் மற்றும் அலுவலக செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார். காவல்துறையின் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகளை வழங்கவும் இதுபோன்ற கலந்தாய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




















