இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (15.06.2026) அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தேவிப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.எம். மகேஷ்குமார் அவர்கள் பலத்த காயம் அடைந்து உயிரிழந்ததையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், பிரபுக்களுர் கிராமத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.V.K. ராஜீவ் அவர்கள் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.சந்தீஷ்.இ.கா.ப., அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















