மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் வருவாய் துறை சார்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15 ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது.
இதில், வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ந் தேதியும் வேட்பு மனு திரும்பப் பெற ஏப்ரல் 9 ந் தேதி நடைபெறுகிற சூழலில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை தொடர்ந்து, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய்த்துறையின் சார்பில் உசிலம்பட்டி மற்றும் பேரையூர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வருவாய்த் துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பு செய்ய வேண்டியவை மற்றும் வாக்குப்பதிவு நடைபெற்ற பின்பு கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















