இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலைய சரகம், வல்லபை நகர், முத்தமிழ் நகர், நம்மாழ்வர் நகர் மற்றும் அன்பு நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதுசம்பந்தமாக கேணிக்கரை காவல் நிலையத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது. மேற்படி தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படை இராமநாதபுரம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.J.சுகுமாறன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.R.சுந்தரேஸ்வரன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.K.திருமுருகன் ஆகியோர்களின் தலைமையின் கீழ் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கடந்த (26.05.2026)-ம் தேதி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 1.அர்ஜூனன் (32). த/பெ.சேகர், சந்தானமாரியம்மன் கோயில் தெரு, காமாட்சிபுரம், உத்தமபாளையம், தேனி மாவட்டம் மற்றும் 2.வேட்டைகாரன் (34). த/பெ.சுகுமாறன், அகஸ்தியர் 2-வது தெரு, பெத்தனியாபுரம், மதுரை மாவட்டம் (இருப்பு) கல்லுப்பட்டி, பெரியகுளம், தேனி மாவட்டம் ஆகியோரை தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து 38 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1,00,000/- கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்படி தனிப்படையினர் (27.05.2026)-ம் தேதி உடைச்சியார் வலசை பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்து சென்ற 1.முனீஸ்வரன் த/பெ தட்சணா இளஞ்செம்பூர் மற்றும் 2.கார்த்திக் த/பெ சேதுபாண்டி தெற்குகாட்டூர் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 ½ சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
மேலும், நேற்று (28.05.2026)-ம் தேதி பஜார் காவல் நிலைய சரகத்தில், மூதாட்டியை ஏமாற்றி தங்கை நகையை திருடிச் சென்ற சித்திரைவேல் (49), த/பெ.பரமசிவம், எல்லிஸ்நகர், மதுரை என்பவரை தனிப்படையினர் உடனடியாக கைது, அவரிடமிருந்து 4 சவரன் தங்க நகை கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரையும், கேணிக்கரை காவல் ஆளினர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















