திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் (09.06.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் T.கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டம் (POCSO), குழந்தைத் திருமணத்தின் தீமைகள், இணையவழி குற்றங்கள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்களான 181 மற்றும் 1098 ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “காவல் உதவி” செயலியின் பயன்பாடுகள் மற்றும் அவசர காலங்களில் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




















