திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரின் ரெட்டி தோப்பு பகுதியில் சாலையோரம் செயல்பட்டு வரும் கடைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் அல்லது குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், சட்டவிரோத செயல்பாடுகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா என்பதையும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். மேலும், கடை உரிமையாளர்களிடம் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



















