செங்கல்பட்டு : ஈச்சம்பாக்கம் பெருமாள் கோவில், தெருவில் வசித்து வந்தவர் ராமலிங்கம் (45), இவர் நீரிழிவு நோய் காரணமாக கடந்த 2-ந் தேதி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் காலில் இருந்த இரு விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் கடுமையான வலியினாலும், மன உளைச்சலிலும், இருந்த ராமலிங்கம், குளியல் அறையில் இருந்த ஜன்னல், கம்பியில் தனது வேட்டியால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.



















