மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம் மதுரை சரக DIG திருமதி.ஆனி விஜயா,IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.N.மணிவண்ணன், IPS அவர்கள் முகாமிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.
இந்த முகாமில் திரு.சாமுவேல் , மேலாளர், அப்பல்லோ மருத்துவமனை, மதுரை. Dr.திரு.கண்ணன், Dr.திரு.இராமசுப்பிரமணியன், ஆகியோர் கலந்துகொண்டனர். IPSOWA மற்றும் Apollo மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட 167 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனை செய்து குறைகள் இருப்பின் மேல்சிகிச்சைக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை