கடலூர்: கடலூர், சிதம்பரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியை வைத்து பணத்தை திருடும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலை சிதம்பரம் நகர போலீசார் அதிரடி நடவடிக்கையால் கைது செய்துள்ளனர்.
மேலும் இக்கும்பல் கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களிடம் பெட்டியை உடைத்து பணத்தை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் இக்கும்பல் சிதம்பரம் பகுதியில் திருடிய பணத்தை சிதம்பரத்திலிருந்து புவனகிரி செல்லும் புறவழி சாலையில் உள்ள காலி மனையில் பாலிதீன் பைகளில் குழிதோண்டி புதைத்து வைத்ததை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி