சென்னை: சென்னை, வியசர்பாடி, எம்.கே.பி நகர் ,நான்காவது மெயின் தெரு, 15 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மரிய ஜோசப், இவரின் மகன் மார்ட்டின் 24, இவர், நெட்வொர்க் என்ஜினீயராக உள்ளார்,
நண்பர்கள் ,கொடுங்கையூர், ராஜரத்தினம் நகர், குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த முனுசாமி, இவரின் மகன் கலைச்செல்வன் 27, இவர் ஏசி மெக்கானிக் வியாசர்பாடி, எம்.கேபி நகர் 14 வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்த விஜய் மகன் ஜான் ஆல்வின் 23, ஸ்டேசனரி கடை வைத்துள்ளார்.
ஆல்வின், கலைச்செல்வன் ஆகியோர்,நள்ளிரவில், , கிருஷ்ணமூர்த்தி நகர் முதல் தெரு சந்திப்பில், மார்ட்டின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்,பின்னர், போதையில் குத்தாட்டம் போட்டதாக தெரிகிறது,
அப்போது, கொடுங்கையூர் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.சக்திவேல் முருகன் ரோந்து ஜீப்பில் வந்தார், ஆயுடப்படை காவலர் திரு.சரத்குமார் வண்டி ஓட்டி வந்தார்,
நடு ரோட்டில் கேக் வெட்டி , கலாட்டா செய்வீர்களா என கேட்டபோது, மார்ட்டின், ஆல்வின், கலைச்செல்வன் ஆகியோர் ஜீப் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
திரு.சக்திவேல்முருகன் மீதும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது பின்னர் ஜீப்பில் நூறு மீட்டர் பின் வாங்கி சக காவலர்களை அழைத்து 3 பேரையும் பிடித்து, காவல் நிலையம்கொண்டு சென்றனர்.
கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மார்ட்டின், ஆல்வின், கலைச்செல்வன் ஆகியோரை கைது செய்தனர்,