கரூர்: கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று (08.04.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரண் பிரசாத், IPS., அவர்கள் தலைமையேற்று, பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து, தேர்தலை அமைதியான மற்றும் சுமூகமான முறையில் நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பணிகளில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.




















