கடலூர் : கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் தார்ப்பாய் மூலம் தற்காலிக வீடுகள் அமைத்து வசித்து வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வறுமையில் இருப்பதாக தகவல் அறிந்து… உடனடியாக நேற்று காவல்துறை கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் நேரடியாக அங்கு சென்று அங்கிருந்த 50க்கும் மேற்பட்டோரை காவல்துறை பேருந்தை வரவழைத்து அனைவரையும் மீட்டெடுத்து கடலூர் முனிசிபல் பள்ளியில் உள்ள தற்காலிக முகாமிற்கு அழைத்து சென்றார்.
அங்கு அவர்களுக்கு இரவு உணவு அளிக்கப்பட்டு, தொடர்ந்து இந்த ஊரடங்கு காலம் முடியும் வரை அங்கேயே தங்க அறிவுறுத்தினார். அனைத்து வசதிகளும் அவர்களுக்கு செய்து தர முகாம் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். தானும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
அவர்களை மீட்டெடுக்கும் பணியில் முனிசிபல் பள்ளியில் உள்ள முகாம் நிர்வாகிகளும், நமது கடலூர் சிறகுகளும், இணைந்து இப்பணியில் ஈடுபட்டோம். தொடர்ந்து கடலூர் நகரில் மக்களைக் காக்கும் பணியில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு கடலூர் நகர மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து வருகிறார் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள்.!
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்