திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் (44) என்பவர், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் சார்பாக இடையகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீநிவாசகன் அவர்கள் தீவிர விசாரணை செய்து தலைமையாசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா