புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அன்னவாசல் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி ஆகிய பகுதிகளில் இலுப்பூர் உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.அருள்மொழி அரசு அவர்களின் அறிவுறுத்தலின் படி அன்னவாசல் காவல்துறையினர் அன்னவாசல் பேரூராட்சி அலுவலர்கள்
மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோருடன் இணைந்து மூன்றாம் அலை கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பந்தமாக துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் வாகன சோதனை நடத்தி முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரைகள் மற்றும் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை














