சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மன்பஈகள் பேரவை, திருப்புத்தூர் மத்ரஸத்துன் நிஸ்வான் மன்பவுல் ஹஸனாத் மற்றும் சிவகங்கை மாவட்ட அரசு காஜி ஆகியோர் இணைந்து நடத்திய முப்பெரும் விழா, திருப்புத்தூர் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் வளாகத்தில் நடைபெற்றது. முதல் அமர்வில் மத்ரஸத்துன் நிஸ்வான் ஆசிரியை ஷிபா தலைமை வகித்தார். மாணவி தாஹிரா பேகம் கிராத் ஓதினார். மாணவிகள் கீதம் பாடினர். ஆசிரியை பர்ஜானா வரவேற்றார். முன்னாள் ஆசிரியைகள் ஸஃபர் நாச்சியார், ஜொஹரா, சித்தி பாத்திமா, அனீஸ் பாத்திமா, மெஹராஜ், சுலைஹா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை சைலா பானு தொடக்க உரையாற்றினார். பட்டம் பெறும் மாணவி மர்ஜான் தொடர் உரையாற்றினார். இளையான்குடி ஒளி மலர்கள் ஆலிமாக்கள் குழு நிறுவனர் யாஸ்மின் சிறப்புரையாற்றினார்.
இரண்டாம் அமர்வாக கல்வி விழிப்புணர்வு மேம்பாட்டு நிகழ்ச்சி ஆலிம் யஹ்யாகன் தலைமையில் நடைபெற்றது. சிராஜுதீன் ஆலிம் கிராத் ஓதினார். ஆலிம்கள் இப்ராஹிம் பாதுஷா, சையது அலி, முஹம்மது தாரிக், முகமது ஷிஹாபுதீன், ஷேக் அப்துல்லா, முஹம்மது ஜலீல், முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஃவத்துல் ஹூதா மதரஸா முதல்வர் முகமது ஆதில் தாவூதி தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நிறுவனர் சி.எம்.என். சலீம் சிறப்புரையாற்றினார். நூருல் அஜீம் மிப்தாகி நன்றி கூறினார். மூன்றாவது அமர்வில் முபல்லிகா, முஅல்லமா பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மன்பஈகள் பேரவை மாநில பொருளாளர் எஸ். அகமது பஷீர் சேட் ஆலிம் தலைமை வகித்தார். லிம்ரா பள்ளி தலைவர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். ஹாபிழ் முகமது அன்சர் அலி ஹஸனி கிராத் ஓதினார். சிவகங்கை மாவட்ட மன்பஈகள் பேரவை செயலாளர் மௌலவி சாதிக் பாஷா வரவேற்றார்.
மவ்லவிகள் பீர்முகமது, பைஜூர் ரகுமான், ஜலாலுதீன், சுல்தான், முகம்மது ரபிக் பாதுஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில மன்பஈகள் பேரவை பொதுச் செயலாளர் மவ்லவி அக்பர் பாதுஷா தொடக்க உரையாற்றினார். மவ்லவி முகமது அப்துல்லா சிறப்புரையாற்றினார். மதுரை மாவட்ட அரசு காஜி சபூர் முகைதீன் ஹழ்ரத் ஸனது வழங்கி பேருரையாற்றினார். நிஸ்வான் துணைத்தலைவர் ஷேக் மகதூன் நன்றி கூறினார். சிவகங்கை மாவட்ட மன்பஈகள் பேரவை கௌரவ தலைவர் முகமது ரசூக் மற்றும் சிவகங்கை மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாரூக் ஆலிம் ஆகியோர் துஆ ஓதினர். நிகழ்ச்சியில் திருப்புத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் கான் முகமது, ஹஜ்ரத்மார் ஹைவே ஜும்மா பள்ளிவாசல் நிறுவனர் வழக்கறிஞர் ஹபிபுல்லா, மீலாது கமிட்டி தலைவர் ஷேக் அப்துல்லா, பள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாமிய அறிஞர்கள், ஆலிம்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















