தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கண்டமனூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




















