தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையினர் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்சோ சட்டம், இணையவழி குற்றங்கள், அவசர உதவி எண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இத்தகைய விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




















