திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆவடி காவல் ஆணையரகம், எண்ணூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொலை மற்றும் அடிதடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் வாணியம்பாடி நகர் பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc,அவர்களின் உத்தரவின்பேரில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் பாண்டியன் அவர்களின் தலைமையில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் திரு.நாகராஜன், மற்றும் காவலர்கள் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 2 கொலை வழக்குகள், 1 கஞ்சா வழக்கு, 6 கொலை முயற்சி வழக்குகள்,16 அடிதடி வழக்குகள், 2 திருட்டு வழக்குகள்,1 பாலியல் துன்புறுத்தல் வழக்கு என மொத்தம் 24 வழக்குகளில் தொடர்புடைய நாகராஜ்(எ) பாம்பு நாகராஜ், எர்ணாவூர், எண்ணூர் மற்றும் 5 வழிப்பறி வழக்குகள் (Snatching), 2 திருட்டு வழக்குகள், 2 அடிதடி வழக்கு என மொத்தம் 9 வழக்குகளில் தொடர்புடைய பாலா (எ) யுவராஜ்,A.S.நகர், எண்ணூர் ஆகியோரை அதிரடியாக கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக எண்ணூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.




















