தமிழக காவல்துறையின் உளவுத்துறையில் புதிய துணை காவல் கண்காணிப்பாளர் (DIG) ஆக பொறுப்பேற்றுள்ள P. சரவணன் அவர்களுக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன்னுடைய நேர்மை, திறமையான நிர்வாகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த காவல் பணிகளின் மூலம் தனித்துவமான சேவையை வழங்கி வந்த அவர், தற்போது தமிழக உளவுத்துறையின் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளது காவல்துறையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் உளவுத்துறை பணிகளை மேலும் வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது. இந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ள மரியாதைக்குரிய P. சரவணன் IPS அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், அவரது பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















