பொள்ளாச்சியில் 3 பிரபல கொள்ளையர்கள் கைது, IG அமல்ராஜ் பாராட்டு

கோவை : கோவை ,பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிகளில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி, போன்ற சம்பவம் நடந்து வந்தது . இதை கண்டுபிடிக்க கோவை மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் உத்தரவின்பேரில் டி ஐ ஜி நரேந்திரன்நாயர் ,போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் ,ஆகியோர் மேற்பார்வையில் டி. எஸ். பி கே. ஜி சிவகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இன்று காலையில் பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில் ஒரே பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பிரபல கொள்ளையர்கள் என்றும் பொள்ளாச்சியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகள் என்பதும் தெரியவந்தது, இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
 
விசாரணையில் அவர்கள் முத்துசாமி ( வயது 24) மேலத்தெரு ,திருச்செந்தூர் பிரகாஷ் (வயது 22) முத்துகிருஷ்ணாபுரம் தூத்துக்குடி. சங்கரபாண்டியன் (வயது 37 )பி கே எஸ் காலனி பொள்ளாச்சி என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 3..20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் , பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் இன்று பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 கொள்ளையர்களை பிடித்து நகைகளை பறிமுதல் செய்த தனிப்படையினரை மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் பாராட்டினார்.

நமது குடியுரிமை நிருபர்

மேலும் செய்திகள்

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.