கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வழங்கிய உயரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும், சிதம்பரம் டிஎஸ்பி திரு. பிரதீப் அவர்கள் வழங்கிய உரிய ஆலோசனைகளும் நேரிடையான வழிநடத்தலும், தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற காரணமாக அமைந்தது.
மேலும், பொதுமக்களின் நல்ல ஒத்துழைப்பும், அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்பும், தேர்தல் அலுவலர்களின் சீரிய கடமையுணர்வும் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான சூழலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதேபோல், கடந்த 45 நாட்களாக இரவு பகல் பாராமல் இத்தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் கடுமையாக உழைத்த அனைத்து காவல்துறை பணியாளர்களுக்கும், ஊர்க்காவல் படையினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















