கடலூர் : இன்று நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பணிகள், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அமைதியான முறையில் மிகச் சிறப்பாக சூழ்நிலையை கையாள்ந்து நிறைவேற்றப்பட்டது.
எங்களது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வழங்கிய உயரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும், சிதம்பரம் டிஎஸ்பி திரு. பிரதீப் அவர்கள் வழங்கிய உரிய ஆலோசனைகளும் நேரிடையான வழிநடத்தலும், மக்களின் நல்ல ஒத்துழைப்பும், கட்சியினரின் ஒத்துழைப்பும், தேர்தல் அலுவலர்களின் சீரிய கடமையுணர்வும் ஆகியவற்றின் மூலம் கடலூர் மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றுத் முடிந்தது.
மேலும், கடந்த 45 நாட்களாக இரவு பகல் பாராமல் இத்தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் தங்களது கடுமையான உழைப்பினை வழங்கிய சக காவல்துறை சகோதரர்களுக்கும், ஊர்க்காவல் படையினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















