சென்னை : தாம்பரம் காவல் ஆணையரக காவல் ஆணையாளர், முனைவர் திரு.M.ரவி, இ.கா.ப. அவர்களை திருமதி, வனஜா, க/பெ, முருகானந்தம் (43), லட்சுமணன் நகர் திரிசூலம், சென்னை என்பவர் கடந்த, 27.04. 2022, ஆம் தேதி நேரில் சந்தித்த தனது மகள் திருமதி. மஞ்சுளா (37), என்பவரை திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த டிராவல் ஏஜென்ட் பாஷா, என்பவர் ருபாய் 60,000, பெற்றுக்கொண்டு கடந்த 17.03.2022, ஆம் தேதி மஞ்சுளாவை, குவைத்திற்கு வீட்டுவேலைக்கு, அனுப்பி யதாகவும் கூறினார்.
ஆனால் தனது மகள் மஞ்சுள 23.04.2022 , ஆம் தேதி தனக்கு அனுப்பிய வீடியோவில், தான் வேலையில்லாமல், உணவுக்கே வழியின்றி கஷ்டப்படுவதாகவும், இங்கு இருந்தால் தன்னை சித்ரவதை செய்து கொடுமைபடுத்துவதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியதால், தனது மகளை மீட்டுத்தர கோரி, கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண் மஞ்சுளாவை, உடனடியாக மீட்க தாம்பரம் காவல் ஆணையாளர் உத்தரவிட்டனர்.
அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், தாம்பரம் மாவட்ட துணை ஆணையாளர் திரு. M.R. சிபி சக்கரவர்த்தி, இ.கா.ப. அவர்களின் மேற்பார்வையில், பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் திரு. D.ஆரோக்கிய ரவீந்திரன், த.கா.ப அவர்களின் நேரடி மேற்பார்வையில் எஸ்.ஐ பல்லாவரம் காவல் நிலைய, சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு. S.R.G. தயாள், அவர்கள் மேற்படி புகாரினை பெற்று , பல்லாவரம் காவல் நிலைய வழக்கு பதிவு , செய்து தாம்பரம் காவல் ஆணையாளர் அறிவுறுத்தினர்.
அவர்களின் அறிவுறுத்தல் மற்றும். வழிக்காட்டுதலின்படி, மேற்படி பாதிக்கப்பட்ட பெண்ணை அனுப்பி, ஏஜென்ட் பாஷா மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட திரிசூலத்தை, சேர்ந்த திருமதி. மும்தாஜ், ஆகியோர்களை விசாரணை செய்யப்பட்ட நிலையில் குவைத்திலிருந்து, பாதிக்கப்பட்ட பெண் திருமதி. மஞ்சுளாவை, நேற்று 02.05.2022 , விமானம் மூலம் சென்னைக்கு, மீட்டு கொண்டு வரப்பட்டார்.
மேற்படி வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணை இந்தியா கொண்டுவர, துரிதமான நடவடிக்கை. மேற்கொண்ட, தாம்பரம் காவல் ஆணையரக காவல் ஆணையாளர் முனைவர் திரு.M.ரவி, இ.கா.ப. அவர்களை, மேற்கொண்ட தாம்பரம் காவல் ஆணையரக காவல் ஆணையாளர் அவர்களை மீட்கப்பட்ட, பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி கூறி வெகுவாக பாரட்டினார்கள். மீட்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், நன்றி கூறி வெகுவாக பாரட்டினார்கள்.